ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் என்ன சொன்னார்?

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பிலான தாம் அறிந்த விடயங்களை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெளிவுப்படுத்தியதாக ஊடகவியலாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள தமது கட்சி அங்கத்தவர்கள் எந்தவொரு அச்சமும் இன்றி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலைக்கு பிரசன்னமானதாகவும் அவர் கூறினார்.

தவறுகள் இழைக்கப்படலாம், குறைபாடுகள் காணப்படலாம். எனினும் அவற்றை ஒழிவு மறைவின்றி வெளிப்படுத்தி நல்லாட்சியை முன்னோக்கி கொண்டு செல்வோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
Previous Post Next Post