விடா முயற்சியே வெற்றிக்கு காரணம்: வர்த்தக பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவி!விடா முயற்சியே தனது வெற்றிக்கு காரணம் என க.பொ.த உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி கிரிதா தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியைச் சேர்ந்த கிரிதா வர்த்தக பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

தனது பெறுபேறுகள் தொடர்பாக ஊடகவியலாளர்களிம் கருத்து தெரிவித்த அவர், “ஆரம்பம் முதலே வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலேயே கல்வி கற்று வந்தேன். தரம் ஐந்து புலமை பரீட்சையில் சித்தியடையாவிட்டாலும் கணக்காளராக வர வேண்டும் என்ற விடா முயற்சியின் காரணமாக இன்று வவுனியா மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் 03ஏ பெற்று முதலிடம் பெற்றிருக்கிறேன். இதற்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் பெற்றோருமே காரணம்” என்று
Previous Post Next Post