புஸ்ஸல்லாவயில் உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம்


புஸ்ஸல்லாவ சோகம தோட்டத்தில் கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்த தாயின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சகோதரனால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

22 வயதான குறித்த பெண் கடந்த 24 ஆம் திகதி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பெண் சுருக்கிட்டு கொண்டதாக ஏற்கனவே விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சுருக்கிட்டதன் காரணமாகவே பெண் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவருடைய சகோதரனால் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய அடுத்தகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post