ஐ.தே.க செயற்பாட்டாளர்கள் இருவர் ஜனாதிபதியுடன்

மஹா ஓயா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உப தலைவர் கே.டீ. சேனாரத்ன, மஹா ஓயா ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பின் செயற்பாட்டாளரான ஆர்.எம்.சீ.எம். ஞானரத்ன ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆத​ரவைத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று  ஜனாதிபதியைச் சந்தித்த அவர்கள் தமது ஆத​ரவைத் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஜோன் செனவிரத்ன, வட மேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
Previous Post Next Post