ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இலியானாகாதலர் ஆண்ட்ரூவை தன் கணவர் என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை இலியானா.

மும்பையைச் சேர்ந்த ஒரு பாலிவுட் நடிகை இலியானா. இவர் ஒரு தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில் ‘கேடி’ மற்றும் ‘நண்பன்’ படங்களில் நடித்துள்ள இலியானாஇ தற்போது பாலிவுட்டில் முழுநேர நடிகையாக உள்ளார்.

இலியானாவும்இ வெளிநாட்டு புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபான் என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவரைத் தன் கணவர் எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளிட்டுள்ளார் இலியானா.

“வருடத்தில் எனக்குப் பிடித்த நேரம்இ கிறிஸ்துமஸ் நேரம். மகிழ்ச்சியான விடுமுறை வீடு காதல் போட்டோவை எடுத்த கணவர் ஆண்ட்ரூ நீபான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் இலியானா.

இந்தப் பதிவால் அவருடைய ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
Previous Post Next Post