விக்னேஸ்வரனின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

வட மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச்சரும்இ மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் உள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் மக்களுடைய காணிகளை வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றன அபகரிப்பதனால் எழும் பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இன்றைய கூட்டம் முதலமைச்சரினால் ஒழுங்கமைக்கப்பட்டது.

எனினும் பல பிரதேச செயலர்கள் மற்றும் வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

இது தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  மாகாணத்தில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்த கூட்டத்தை ஒழுங்மைத்திருந்தோம்.

ஆனால் பல அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்வில்லை.

மேலும் மன்னார் மாவட்டத்திலிருந்து இந்த கூட்டத்திற்கு வரவிருந்த பிரதேச செயலர்களை அரசாங்க அதிபர் தடுத்திருப்பதாக அறிய முடிகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

இது மிகுந்த கவலையளிக்கின்றது. மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் இணைந்து செயற்படவேண்டும் என்பதற்கு தடையாகவே உள்ளது.

எனவே இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய்வோம்.

மேலும் இன்றைய கூட்டத்தில் அரச காணிகள் தொடர்பாகவும் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிக ள் திணைக்களம் போன்ற மக்கள் காணிகளை அபகரிப்பது தொடர்பாகவும் ஆராந்துள்ளோம்.

அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று குறிப்பிட்டார்.
Previous Post Next Post