பொது மக்களின் நலன் கருதி விசேட ரயில் சேவைபாடசாலை விடுமுறைக் காலம் முடிவுக்கு வந்துள்ளதாலும் புத்தாண்டை முன்னிட்டும் பொது மக்களின் நலன் கருதி விசேட ரயில் சேவை இடம் பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க இதனைக் கூறினார்.

எதிர்வரும் ஜனவரி 7ம் திகதி வரை விசேட ரயில் சேவை நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை பண்டாரவளை பிரதேசங்களுக்கும் செல்லும் பயணிகளின் நலன் கருதி இந்த ரயில் சேவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஏனைய பிரதேசங்களும் விஷேட ரயில் சேவையை முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Previous Post Next Post