உயிரியல் அமைப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவில் யாழ்.மாணவி மூன்றாம் இடம்! (Video)


வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் அமைப்பு மற்றும் தொழில்நுட்ப (Bio system and Technology) பிரிவில் யாழ்.மாணவி அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த கமலேஸ்வரி செந்தில்நாதன் என்ற மாணவியே 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட நிலையில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த மாணவி கமலேஸ்வரி, உயர்தரப் பரீட்சையில் பெற்றுக் கொண்ட பெறுபேறுகளுக்கு காரணமாக அமைந்த பெற்றோர், பாடசாலை அதிபர், ஆசியர்கள், மற்றும் ஏனைய ஆசியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post