2.0 ரன்டைம் இவ்வளவுதானா? ரசிகர்கள் அதிர்ச்சி


இயக்குனர் ஷங்கர் தற்போது 400 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கிவரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

கிராபிக்ஸ் ஹாலிவுட் தரத்தில் இருக்கவேண்டும் என இயக்குனர் உறுதியாக இருப்பதால் சென்ற வருடமே வெளியாகவேண்டிய 2.0 இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிபோனது.

தற்போது படத்தின் ரன்டைம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான இந்திய படங்களை போல 150 நிமிடங்கள் இல்லாமல், ஹாலிவுட் படங்களை போல 100 நிமிடம் மட்டுமே இருக்குமாம். ஆங்கிலத்திலும் இந்த படம் வெளியாகும் என்பதால் தான் இந்த முடிவு என கூறப்படுகிறது.
Previous Post Next Post