புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிக்கு 3 மாத சிறை!
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்பவருக்கு த் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பறித்துள்ளது குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப்பத்திரம் போன்ற இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்காமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டு இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

3 மாத சிறைத் தண்டனையும் 18 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியாழ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
Previous Post Next Post