கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வௌியேறும் பகுதி இன்று முதல் மூடப்பட்டுள்ளதுகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் புதிய களனி பாலத்துக்கு அண்மையில் உள்ள கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வௌியேறும் பகுதி இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றீடாக பேலியகொடயினூடாக கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் காரணமாகவே இந்த வீதி மூடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Previous Post Next Post