தங்க நகை மோசடி: பிரபல பாடகரின் மனைவி கைது!தங்க நகை மோசடி குற்றச்சாட்டில், இலங்கையின் பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி ஹசினி ரத்நாயக்க, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அரச வங்கியொன்றில் இடம்பெற்ற தங்க நகை மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தங்கல்லை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


அதனை தொடர்ந்து அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குறித்த வங்கியின் முன்னாள் ஊழியர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.ஒரு மில்லியன் பெறுமதியான நகை மோசடி குறித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரை பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post