ரசிகர்களின் காலில் விழுந்த நடிகர் சூர்யா; வைரலாகும் வீடியோ


நடிகர் சூர்யா தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார். இவர் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக நாளை தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்க, நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பொதுவாக ரசிகர்கள் காலில் விழும் பழக்கம் இருக்க கூடாது என பலரும் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் ரஜினியும் அவ்வாறு தனது ரசிகர்களிடம் கூறினார். இதனை தடுக்கும் வகையில் நடிகர் சூர்யா, காலில் விழுந்த ரசிகர்களை தடுத்து அவரே காலில் விழுந்தார், இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், தொடர்ந்து அவர் காலில் விழுவதை நிறுத்தினார்கள். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றது.

Previous Post Next Post