காணாமல் போன காமெடி நடிகர்! எந்த கண்டத்தில் இருக்கிறார், என்ன செய்கிறார் தெரியுமா?


விரிந்து கிடக்கும் தமிழ் சினிமாவில் விடாமல் பிடித்திழுக்கிறது சீரியல் மோகம். இதில் 1996 கலக்கிய மினி சீரியல் பாட்டிகள் ஜாக்கிரதை. இதில் பெண் வேடமிட்டு பாட்டியாக நடித்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி.

அப்போது வெளியான அவ்வை சண்முகி படம் போல தான் இதன் கதையும். இவர் எனக்குள் ஒருத்தியிலும் பெண்ணாக நடித்திருந்தார். இந்த சீரியல்கள் அவரை தனியாக அடையாளப்படுத்தின.

காமெடி மூலம் கலகலவென சிரிக்க வைத்தார். அழகன் என்னும் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறாராம். போட்டிகள் பெரிதும் இல்லாத நிலையின் இதற்கு வரவேற்பும் இருந்தது.

இதன் பிறகு அவர் படங்களிலோ, சீரியல்களிலோ காணவில்லை. இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி பனானா ட்ரீ என ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறாராம்.

அங்கு ஷூட்டிங்காக வருபவர்களுக்கு தேவையான வற்றை செய்து கொடுக்கிறாராம். சமீபத்தில் பிரபல சானலில் புத்தாண்டுக்காக அன்புடன் ரம்யாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு தயிர் சாதத்தை ரெஸிப்பி என சொல்லி பலரையும் சிரிக்க வைத்தார்.
Previous Post Next Post