நீர்வேலிப் பகுதியில் வீதி விபத்தில் காயமடைந்தவர் மரணம்!
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் ஹைஏஸ் வானும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியிருந்தன. குறித்த விபத்தில் 6 வயது சிறுமி மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அதில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த துரைசிங்கம் (வயது 65) என்பவர் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
Previous Post Next Post