செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை தொடர்பில் வடக்குப் பெண்களிடம் விழிப்புணர்வு குறைவுஎமது கலாசாரம், பண்பாட்டை பொறுத்தவரையில் குழந்தை வரம் என்பது ஒரு பெண்னை பூரணத்துவமிக்கவளாக்குவதாகவே பார்க்கப்படுகின்றது. குழந்தைக்கு தாயாக முடியாத பெண்ணை மலடி என்றும் குழந்தைக்கு தந்தையாக முடியாத ஆணை மலடன் அல்லது ஆண்மையற்றவன் என்றும் சமூகம் ஒதுக்கி வைத்துவிடுகின்றது. ஆனால் இவற்றுக்கு இன்றைய நவீன மருத்துவம் முடிவுகட்டி இயற்கையால் முடியாததை கூட செயற்கையால் சாதிக்கின்றது.

இதில் ஒன்றுதான் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கொடுப்பது. இச்செயற்கை கருவூட்டல் முறை இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளிலேயே இதுவரை காலமும் இடம்பெற்று அண்மைக்காலமாக கொழும்பிலுள்ள சில பிரபல மருத்துவமனைகளிலும் இச்செயற்கை கருவூட்டல் சிகிச்சைகள் வழங்கப்படத் தொடங்கி குறுகிய காலத்திலேயே இச்செயற்கை முறைக் கருவூட்டல் சிகிச்சை பெறும் வசதியை வடக்கு மக்களுக்கு யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இயங்கும் பிரபல தனியார் மருத்துவனையான நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிட்டல் பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்திய மற்றும் கொழும்பிலுள்ள பிரபல வைத்தியசாலைகளுக்கு நிகரான வசதிகளைக் கொண்ட “நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிட்டல்“ இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களைக் கொண்டே இச்செயற்கை கருவூட்டல் சிகிச்சை முறையை வெற்றிகரமாகத் தொடக்கிவைத்துள்ளது.

வடமாகாணத்தை சேர்ந்த குழந்தையில்லாத் தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி இனி இந்தியாவுக்கோ, கொழும்புக்கோ செல்ல வேண்டிய தேவையும் இல்லை. பணத்தைக் கரியாக்க வேண்டிய அவசியமும் இல்லை.

தமது சொந்த இடத்திலேயே தரமிக்கதும் செலவு குறைந்ததுமான செயற்கை கருவூட்டல் சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியுமென நம்பிக்கை தருகின்றது நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிட்டல் நிர்வாகம்.


இது தொடர்பில் நோதேர்ன் சென்ட்ரல் ஹொட்டல் பெண் நோயியல் மற்றும் குழந்தையின்மைக்கான வைத்திய நிபுணரும் ஆலோசகருமான டாக்டர் சதா எம்.சதானந்தன் கூறுவதைப் பார்ப்போம்.


குழந்தையின்மைக்கான காரணம் ஆணிடமும் இருக்கலாம். பெண்ணிடமும் இருக்கலாம். இருவரிடமும் சேர்ந்தும் இருக்கலாம். குறைபாடு யாரிடம் என்பதையும் என்ன என்பதையும் கண்டுபிடித்து அதற்கு சிகிச்சையளிக்க நவீன மருத்துவத்தில் எத்தனையோ வழிகள் வந்துவிட்டன. நவீன மருத்துவ வழிகளை இனம்கண்டு அவற்றினூடாக சிகிச்சைகளை பெறுவதன் மூலம் ஒவ்வொருவரும் தாய்மைப் பதவியை பெற்றுக்கொள்ளலாம்.


இலங்கையிலும் கூட இச்சிகிச்சை முறைகள் தற்போது வெற்றிகரமாக இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணம் சென்டால் வைத்தியசாலையில் செயற்கை கருகட்டல் முறைமைக்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான விசேட நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களையும் லண்டனிலிருந்து விஞ்ஞானிகள் குழுவொன்றையும் மாதமொருமுறை இலங்கைக்கு அழைக்க திட்டமிட்டுள்ளோம்.


இலங்கையில் செயற்கை கருக்கட்டல் முறைக்கான சிகிச்சைகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் போதிய விளக்கமின்மையாலேயே பெருமளவானோர் அதிகளவு பணத்தை செலவழித்துக்கொண்டு இந்தியா சென்று தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த அசௌகரிய நிலையப் போக்கவே இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நொதர்ன் சென்டரல் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை நிலையத்தின் ஆரம்ப பரிசோதனைக்கு பெருமளவானோர் கலந்து கொண்டனர். உண்மையிலே வடமாகாணத்தில் செயற்கை கருக்கட்டல் முறை அதிக வரவேற்பை பெற்றுள்ளது.


கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் போது கலந்துகொண்டவர்களில் 50 வீதத்திற்கும் மேற்பட்டோர் 40 வயதுக்கு மேற்பட்டவர் ளாகவே இருந்தனர். கடந்தவாரம் மாத்திரம் இது தொடர்பில் 60 பேரை பரிசோதித்து அவர்களுக்கான தொடர் சிகிச்சை ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். உண்மையிலே இது ஒரு பெரிய வெற்றியாகும்.


கடந்தவாரம் பரிசோதித்த கருத்தரிப்பு வாய்ப்பு குறைவானவர்களுள் 25 வீதமானோர் 35 வயதுடையவர்களாகவும் 25 வீதமானோர் 35 - 40 வயதுடையவர்களாகவும் 25 வீதமானோர் 40 - 45 வயதுடையவர்களாகவும் 25 வீதமானோர் 45 வயதுக்கு மேற்பட்டோராகவும் இருந்தனர். இவர்களுக்கு அந்தந்த வயது கட்டுப்பாட்டுக்கு அமைய சிகிச்சைகளை முன்னெடுத்துள்ளோம்.


இந்த சிகிச்சை முறைமையை பல வயதினரிடையே மேற்கொண்டாலும் 35 வயதே மிகவும் பொருத்தமாகும். இதன்மூலம் பிறக்கும் பிள்ளைகள் ஏனையோரை விட ஆரோக்கியமானவர்களாகவும் திறமையானவர்களாகவும் பிறக்கின்றனர். இந்த செயற்கை முறை கருக்கட்டல் முறையில் சாதாரண பிள்ளைப்பேறு 5060 வீதத்திற்கு அதிகமாகவும் அசாதாரண குழந்தைப்பேறு மிகவும் குறைவாகவும் கிடைக்கப்பெறுவது இதன் நன்மையாகும்.


இந்த ஐ.வி.எப்.(IVF) சிகிச்சையை 30 வயதில் செய்யுமிடத்து 50 வீதத்திற்கு மேலும் 35 வயதில் 40 வீதமும் 38 வயதில் 25 - 30 வீதமும் 40 - 45 வயதில் 10 வீதமும் 45 வயதுக்கு மேல் 5 வீதமும் கருத்தரிப்பது சாத்தியமானது.


ஒரு பெண்ணின் உடற்பருமன் அதிகமெனினும் அவர் இயற்கை முறையில் கருத்தரிப்பதில் சாத்தியப்பாடு மிகக்குறைவாக இருப்பதுடன் IVF முறையிலும் வெற்றியளிக்காத நிலைமையே ஏற்படும். ஒரு பெண்ணின் உடற்திணிவு சுட்டெண் (BMI) 30 ஆக இருக்க வேண்டும்.

இதற்கு அதிகமாக இருந்தால் 10 வீத உடற்பருமனை குறைத்த பிறகே இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டும். உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடுகளே மிகவும் சிறந்தவை.


இயற்கை முறையில் கருத்தரிக்கும்போது ஒரே ஒரு கருதான் உருவாகும். அதுவே சோதனைக் குழாய் சிகிச்சை முறையில் முறையில் கருவை உருவாக்கும்போது நிறைய கருக்கள் உருவாக்கப்படும். வயது, உடல் நிலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பையினுள் செலுத்தப்போகின்ற கருவின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.


இந்த IVF, ICSI சிகிச்சை முறைக்கு 56 இலட்சம் ரூபா செலவாவதுடன் தேவைப்படும் முட்டையை வழங்குவோருக்கு 2 3 இலட்சம் ரூபாவை கொடுக்க வேண்டும்.


விசேட நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர் குழாம் விஞ்ஞானிகளுடன் மேற்கொள்ளப்படுகின்ற இந்த செயற்கை முறையிலான கருக்கட்டல் முறைமையினை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் யாழ்ப்பாணம் நொதர்ன் சென்டரல் வைத்தியசாலையில் 80 வீதமுள்ளன.

மேலதிக தேவைகளை கொழும்பு 5 றைன்வெல்ஸ் வைத்தியசாலையில் மேற்கொள்ளமுடியும்.


IVF தொடர்பாக வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காகவும் வைத்திய ஆலோசனை பெற நேரமொதுக்குவதற்கும் ராணி 077 343 9988 அல்லது வைத்தியசாலை இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளமுடியும்.
Previous Post Next Post