வவுனியா விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

வைரவபுளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் மிக வேகமாக பயணித்த கார் ஒன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது காரில் பயணித்த வைரவபுளியங்குளத்தை சேர்ந்த 21 வயதுடைய பிரதாப் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், படுகாயமடைந்த இரத்தினபுரியை சேர்ந்த பிரகாஸ் (வயது24) மற்றும் அவர்களது நண்பரொருவரையும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொதுமக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தபோதிலும் 24 வயதுடைய பிரகாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் கார் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் பொலிஸாரினால் விபத்து நடந்த பகுதியில் இருந்து அகற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post