கிணற்றில் தவறி விழுந்து மாணவன் மரணம் - விளையாட்டு வினையானது!
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கு பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று(06) சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அவ்வூரைச்.சேர்ந்த ச.டிசாந் (வயது -11) என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.

அப்பகுதியில் உள்ள தோட்டக் காணியில் பட்டம் ஏற்றி விளையாடும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்த நிலையில் தோட்டக்
கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post