யாழில் பெற்ற மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை!


யாழில் தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையிலேயே குறித்த நபருக்கு நீதிபதி இளஞ்செழியன் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், 45,000 ரூபா நஷ்ட ஈடும், 6,000 ரூபா தண்டப்பணமும் விதித்துள்ளார்.அத்துடன், இவற்றை கட்டத்தவறும் பட்சத்தில் 3 மாத கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2012ஆம் ஆண்டில் யாழ். தெல்லிப்பழை பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கானது சட்டமா அதிபரால் யாழ். மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post