வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இ.போ.ச. சாரதி மீது பொலிசார் தாக்குதல் - சாரதி வைத்தியசாலையில்!
வவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று (04) மாலை 6.00 மணிக்கு இ.போ.ச சாரதி மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதில் குறித்த சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது.

இ.போ.ச பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதியம் இரண்டு மணிமுதல் சேவைகளை மேற்கொண்டபோதும் மாலை யாழ்;பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்குள் உள் செல்ல முயன்றபோது தனியார் பேரூந்து ஊழியர்கள் இ.போ.ச பேரூந்தை அனுமதிக்காத நிலையில் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து சாரதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது.

பொலிசார் இப்பிரச்சனையில் தலையிட்டு இ.போ.ச பேருந்து சாரதி; ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியதில் குறித்த இ.போ.ச சாரதியான ஏ. எம். இர்ஸாட் வயது 30 என்பவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Previous Post Next Post