காய்ச்சலுடன் இரவு படுக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் மரணம் - யாழில் சம்பவம்!
காய்ச்சலுடன் இரவு படுக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பெர்னான்டோ ஜோன் அன்டனி (வயது 57) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவர். குறித்த நபர் நேற்றுமுன்தினம் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

அன்றைய தினம் மருந்தை உட்கொண்டு விட்டு இரவு 10 மணிக்கு படுக்கைக்கு சென்றுள்ளார். காலை அவருடைய மனைவி குறித்த நபரை எழுப்பும்போது அவர் அசைவின்றி இருந்துள்ளார்.

உடனடியாக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு வந்து சேர்த்த போது இவரை பரிசோதித்த வைத்தியர்கள் இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.
Previous Post Next Post