ஹற்றனில் அதிசய முட்டையிடும் கோழி!
ஹற்றன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேடு ஒன்று ஒவ்வொன்றும் 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டைகளை இட்டு வருவதாக பண்ணை உரிமையாளர் மூர்த்தி தெரிவித்தார்.

வழமையாக கோழி சுமார் அறுபது தொடக்கம் எழுபது கிராம் வரையான நிறை கொண்ட சாதாரண முட்டைகளை மாத்திரம் இட்டு வந்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரட்டை கோதுடைய பெரிய முட்டையொன்றினை இட்டுள்ளதாகவும் 14.01.2018 அன்று சுமார் 180 கிராம் கொண்ட அதிசயத்தக்க பாரிய முட்டை ஒன்றினை இட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாதாரணமாக பெட்டை கோழி ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை முட்டை இடுவதாகவும், ஆனால் இந்த கோழி இரண்டு தடவைகள் வித்தியாசமான முட்டைகளை இட்டுள்ளதாகவும் பண்ணை உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.


Previous Post Next Post