யாழ்.சங்குவேலியில் இளைஞரின் சடலம் மீட்பு – கொலை என சந்தேகம்!


யாழ்.சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். சண்டிலிப்பாயை சேர்ந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு (வயது 20) எனும் இளைஞரே சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

குறித்த இளைஞர் கூலி வேலைக்கு செல்பவர் எனவும் , அவ்வாறு கடந்த 02ஆம் திகதி வேலைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. என உறவினர்கள் தெரிவித்தனர். அந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை சங்குவேலி பகுதியில் உள்ள வயல் கிணற்றில் இருந்து இளைஞர் சடலாமாக மீட்கப்பட்டு உள்ளார்.

சடலத்தில் அடிகாயங்கள் உள்ளமையினால் , குறித்த இளைஞரை அடித்து கொலை செய்த பின்னர் சடலத்தை வயல் கிணற்றில் வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இந்நிலையில் அது தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் மல்லாகம் நீதிவானின் உத்தரவின் பேரில் உடல் கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Previous Post Next Post