நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை, இன்று (வெள்ளிக்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ். நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது கடந்த வருடம் ஜூலை மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post