சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தாஜி முதற் தடவையாக யாழ். மண்ணிற்கு விஜயம்!
சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தாஜி முதன் முதலாக கடந்த செவ்வாய்க் கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ துர்க்கா மணிமண்டபத்தில் இடம் பெற்ற ஆன்மீக நிகழ்விற்கு விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

வெகு விமரிசையாக நடைபெற்ற, இந்த நிகழ்வில் அவரது ஆன்மிக உரை “Life Management Techniques“ என்ற கருப்பொருளில் இடம்பெற்றது. இதன் தமிழாக்கத்தை யாழ் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் வழங்கினார்.
சின்மய நாதம் காலாண்டுச் சஞ்சிகைச் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில், துறவியர்கள், குருமார்கள், சமயப் பெரியார்கள் , துறைசார் பெரியார்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் , மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டது சிறப்பித்தார்கள்.

படங்கள் - ஐ.சிவசாந்தன்

Previous Post Next Post