அரியாலையில் விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் – அரியாலை துண்டிச்சந்தி எனும் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த ஏ.ரவீன் (வயது- 24) மற்றும் கே.சுதர்ஷன் (வயது – 32) எனும் இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இரு இளைஞர்களும் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மதிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். இதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இரு இளைஞர்களினதும் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இவ்விபத்திற்கு காரணமென ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post