பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு! (Video)
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர், இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தலைமைகளைச் சந்திக்கவுள்ள மேற்படி குழுவினர் நாட்டின் ஜனநாயக முன்னேற்றம், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post