யாழ்.குருநகர் பகுதியில் வீடொன்றில் தீ விபத்து!(Video)
யாழ்ப்பாணம் குருநகர் ஐந்துமாடி குடியிருப்புக்கு அண்மையாகவுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அறை ஒன்றுக்குள் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாகவே தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த அறையில் மட்டுமே தீ பரவியதால் வீட்டிலிருந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தீ பரவிய அறைக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் அத்தியவசிய ஆவணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் யாழ். மாநகர தீயணைப்புப் பிரிவினரின் கடும் போராட்டத்துக்கு பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
 Previous Post Next Post