தாவடியில் பொலிஸார் அதிரடி! மாட்டிய 23வயது பிரபல ரவுடி!!

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வைத்து கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்படும் முக்கிய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.


யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வைத்து கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 08 ஆம் திகதி நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து 8 பேர் கொண்ட குழுவினர் இருவரை சரமாரியாக வெட்டினர். அந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

ஒப்பரேசன் ஆவா:

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்ததை அடுத்து யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்கசரின் கீழ் ஒப்பரேசன் ஆவா என்ற பொலிஸ் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவே தாவடியில் சந்தேநபரைக் கைது செய்தது என்று கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் கடந்த ஆண்டு கோப்பாய் பொலிஸார் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தொடர்பிலும் சந்தேகநபராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post