ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது!

கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின், ஒருபகுதி தாழிறங்கியுள்ளதால், அவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகமிக அவதானத்துக்கு வானங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில், அலவத்துகொட 8ஆம் மைல்கல் பகுதியிலேயே, வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

இந்த வீதி, இரண்டு ஒழுங்கைகளை கொண்டிருந்தாலும், வீதி தாழிறங்கிய பகுதியில் மட்டும், ஒரு ஒழுங்கை மட்டுமே பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற மோசமான வானிலை, தொடருமாயின், இந்த வீதியின் சில பகுதிகள் ஆங்காங்கே தாழிறங்கும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Previous Post Next Post