யாழில். மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் விபத்து!


மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இளம் பெண்கள் இருவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் கட்டப்பிராய்ச் சந்தியில் இடம்பெற்றது.

யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, பெண்கள் இருவரும் போதையில்  நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அவர்கள் இருவரையும் சோதித்துப் பார்த்தனர். அவர்கள் இருவரும் மது அருந்தியமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் அவர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பொலிஸார், பெண்கள் இருவரையும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதேவேளை பெண்கள் இருவரும் 26 மற்றும் 27 வயதுடையவர்கள் என்று தெரிய வருகின்றது. இச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post