யாழ் நகரில் சுகாதாரத்தை பேணத் தவறிய முன்னணி வெதுப்பகத்திற்கு சீல்!!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல முன்னணி வெதுப்பகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின்படி இன்று மதியம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.


உணவு தயாரிப்பும், திருத்த வேலைகளும் ஒரே இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று சுகாதாரப் பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அது தொடர்பில் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, வெதுப்பகம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post