“கூட்டமைப்பே மௌனத்தை கலை“- கிளிநொச்சியில் திரண்ட மக்கள்!!

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சமத்துசம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து டிப்போச் சந்தி வரை ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாடடக் காரர்கள், பொருள்களின் விலையை ஏற்றாதே மக்களின் வயிற்றில் அடிக்காதே, அரசியல் தீர்வா விலைவாசி உயர்வா?, அரசே விலையைக் குறை கூட்டமைப்பே மௌத்தைக் கலை உள்ளிட்ட பதாகைகளைத் தாங்கியிருந்தனர்.

Previous Post Next Post