யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை!
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(20) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை- 08.30 மணி முதல் மாலை- 06 மணி வரை யாழ்.குடாநாட்டின் இளவாலை, சில்லாலை, சாந்தை, அளவெட்டியின் ஒரு பகுதி, தொட்டிலடி, சங்கானை, சுழிபுரம் முழுவதும், பண்டத்தரிப்பு, பிரான்பற்று, சேந்தான்குளம், ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை, புனிதநகர், மாதனை, கற்கோவளம், வெளிச்சவீடு, தும்பளை, வறாத்துப்பளை, திகிரி, கற்கோவளம், ஐஸ் தொழிற்சாலை, கெருடாவில், பொக்கணை, தொண்டைமானாறு, அக்கரை, மயிலியதனை, ஊரிக்காடு, குருநகர், பழைய பூங்கா வீதியின் ஒரு பகுதி, பாசையூர், கொய்யாத் தோட்டம், கொழும்புத்துறை வீதி, புங்கன்குளம் வீதி, சுவாமியர் வீதி, வலன்புரம், துண்டி, நெடுங்குளம், மணியந் தோட்டம், உதயபுரம், குருநகர் ஐஸ் தொழிற்சாலை, Cey- Nor பவுண்டேஷன் லிமிற்ரெட், மாவட்டக் கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், NEFAD பவுண்டேஷன் லிமிற்ரெட், குருநகர் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம், Infentas ice solutions(Pvt)Ltd ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post