யாழ்.செயலகம் முன்பாக விபத்து: மாணவியும் தந்தையும் காயம்!
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின.

மோட்டார் சைக்கிளிலில் பயணித்த மாணவியும் அவரது தந்தையும் காயமடைந்தனர்.

கண்டி நெடுஞ்சாலையில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாடசாலை மாணவியும் அவரது தந்தையும் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்பபாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அப்பகுதியிலிருந்த வடை வண்டி முற்றாகச் சேதமடைந்தது


Previous Post Next Post