ஒரு கோடி பெறு­ம­தி­யான -ஒரு கிலோ ஹெரோ­யின்!!

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்குக் கொண்டு செல்­லப்­பட்ட ஒரு கிலோ ஹெரோ­யின் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரால் பளைப் பிர­தே­சத்­தில் வைத்து நேற்று முன்­தி­னம் இரவு கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. ஹெரோ­யி­னைக் கடத்த முயன்ற குற்­றச்­சாட்­டில் இரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.இது தொடர்­பில் பளைப் பொலிஸ் நிலைய வட்­டா­ரங்­கள் தெரி­வித்­த­தா­வது, யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு ஹெரோ­யின் கடத்­தப்­ப­டு­வ­தாக இர­க­சி­யத் தக­வல் கொழும்பு சிறப்­புக் குற்­றத் தடுப்பு பிரி­வி­ன­ருக்கு கிடைத்­துள்­ளது. கொழும்­பி­லி­ருந்து கிளி­நொச்சி சிறப்பு அதி­ர­டிப் படைத் தலை­மை­ய­கத்­துக்கு உட­ன­டி­யாக தக­வல் பரி­மாற்­றப்­பட்­டுள்­ளது.

பளைப் பிர­தே­சத்­தில் பொலி­ஸார் வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­னர். சந்­தே­கத்­துக்கு இட­மான ‘ஹயேஸ்’ வாக­னத்தை மறித்­துச் சோதனை மேற்­கொண்­ட­போது, அந்த வாக­னத்­தி­லி­ருந்து ஹெரோ­யினை மீட்­கப்­பட்­ட­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வாக­னத்­தைச் செலுத்­திச் சென்ற இரண்டு பேரும் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளி­டம் முன்­னெ­டுக்­கப்­பட்ட முதல்­கட்ட விசா­ர­ணை­க­ளில், கொழும்­பில் ஒரு கோடி ரூபா­வுக்கு ஹெரோ­யினை ஒரு­வ­ருக்கு விற்­பனை செய்­துள்­ள­னர். அதனை ஒப்­ப­டைக்க கொண்டு சென்­ற­போதே கைதா­கி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ள­னர்.
Previous Post Next Post