ஒன்பதாவது முள்ளிவாய்க்கால் ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் நினைவேந்தப்பட்டது! (Video)


ஒன்பதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் பொதுச் சுடரேற்றி நினைவு கூறப்பட்டது.

இன்று (18-05-2018) 2009 இறுதி போரில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவு கூர்ந்து நடத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

2009 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்து தானும் காயமடைந்த யுவுதியான கேசவன் விஜிதா என்பர் பொதுச் சுடரை ஏற்றிய பின்னர் தனித்தனியாக சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதி யுத்தத்தில் தங்களுடைய உறவினர்களை ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவின் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலிருந்து விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட பேரூந்துகளில் பொது மக்கள் வருகைதந்திருந்தனர்.

யாழ் பல்கலைகழக மாணவர்கள் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது பொதுச் சுடரேற்றும் பகுதிக்குள் வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனை தவிர வேறு எந்த அரசியல்வாதிகளும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாவை சேனாதிராஜா சாள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சிறிதரன் சாந்திசிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் யாழ் மாநாகர சபை உறுப்பினர்கள் என அனைவரையும் மாணவர்கள் உட்செல்ல விடாது தடுத்துவிட்டனர்.

நன்றி - டிலக்சன்


Previous Post Next Post