முள்ளிவாய்க்கால் வலி சுமக்கும் ஊர்தியில் அஞ்சலித்த வெளிநாட்டுப் பெண்! (VIDEO)முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தி இன்று வவுனியாவைச் சென்றடைந்த போது, அதனைக் கண்ட வெளிநாட்டுப் பெண் ஒருவர் ஊர்திக்கு மதிப்பளித்து அஞ்சலி செலுத்தினார்.

வவுனியா பஜார் வீதியில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள வர்த்தகர்கள் சுடர் ஏற்றுவதற்கு நிறுத்தப்பட்டிருந்தபோது, அந்த வீதியால் சென்ற வெளிநாட்டு பெண் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

வல்வெட்டித்துறையிலிருந்து ஆரம்பமான வாகன ஊர்தி நாளை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post