மட்டக்களப்பில் 1 இலட்சம் வேலைவாய்ப்ப்புக்கான நேர்முகதேர்வுகள் ஆரம்பம்!

ஜனாதிபதி கோட்டாபயவின் எண்ணக்கருவுக்கு அமைய இன்று தொடக்கம் நாடளாவிய ரீதியில் பல்நோக்கு அபிவிருத்திச் செயலணியின் ஊடாக வருமானம் குறைந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேர்முகப்பரீட்சை இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலகங்களில் இன்று முதல் சனிக்கிழமை (29) வரை நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர், வாழைச்சேனை பிரதேச செயலாளர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர், வாகரைப் பிரதேச செயலாளர், கிரான் பிரதேச செயலாளர், செங்கலடி பிரதேச செயலாளர் ஆகிய பிரிவுகளில் நேர்முகப் பரீட்சைக்கு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த நேர்முகப் பரீட்சையில் நடத்துனர்களாக பிரதேச செயலக உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Previous Post Next Post