ஏழை குடும்பத்தில் பிறந்து பலதுறைகளில் சாதனை படைத்த நபர்... வவுனியா மத்திய மகா வித்தியாலய அதிபராக நியமனம்.!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அதிபராக லோகேஸ்வரன் நியமனம் தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய நிரந்தர அதிபராக ஆ.லோகேஸ்வரன் நிரல் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் தேசிய பாடசாலை அதிபராக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமாள் அவர்களினால் இன்று கொழும்பில் வைத்து இவ் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கை கல்விநிர்வாக சேவையின் பொது ஆளணியைச் சேர்ந்த உத்தியோகத்தராவார். சாதாரண குடும்ப பிண்ணணியில் பிறந்து போட்டிப் பரீட்சைகளின் ஊடாக பல்வேறு பதவிகளை கல்வித்துறையில் வகித்துள்ளார்.

முகாமைத்துவ உதவியாளர், ஆசிரியர், உதவிக்கல்விப்பணிப்பாளர், இறுதியாக மடு கல்வி வலயத்தில் பிரதிக்கல்விபணிப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post