புர்காவை தடை செய்வது மனித உரிமை மீறல்: முஜிபுர் ரஹ்மான்

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை தடைசெய்ய இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

புர்கா என்பது முஸ்லிம் மக்களின் உரிமை எனவும் அதில் கை வைக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.புர்காவை தடைசெய்தால், அது மனித உரிமை மீறலாகும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post