யாழில் ஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்!

யாழ். மருதனார்மடம் பகுதியில் சற்று முன்னர் ஆவா குழு உறுப்பினர்களை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்திருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.அந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் ஒன்று கூடியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர்களை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆவா குழு உறுப்பினர் ஒருவரின் பிறந்தநாள், அந்த விடுதியில் கொண்டாடப்படுவதாகவும், இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் அவர்களை சுற்றிவளைத்திருப்பதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

பின்னிணைப்பு......

விடுதலைப் புலிகளை மீள் உருக்காக்கம் செய்ய ஆவா குழுவினர் முயற்சிப்பதாக கிடைத்த தகவலுக்கு அமையவே சுமார் 60க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த விடுதியில் இருந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு கேட்ட போது, மருதனார்மடம் பகுதியிலிருந்து பலர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post