ஓய்வுபெறும் அரச ஊழியர் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவு

அரச ஊழியராக இருந்து ஒருவர் ஓய்வு பெற்றால் ஒரே மாதத்தில் அவருக்கான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பசில் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.


“இலங்கை நடைமுறையில் அரச ஊழியர் ஒருவர் ஓய்வூதியம் பெற்றால் அவரது ஓய்வூதியத்தை பெற இரண்டு வருடங்களாகும். எனினும் அதனை ஒரு மாதத்திற்குள் வழங்கும் முறையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஓய்வு பெற்றவரின் ஓய்வூதிய கோப்புகளை பல மாதங்கள் வைத்துக் கொள்ளப்படுகின்றன. ஓய்வூதியத்தை பெற இரண்டரை வருடங்களாகின்றன.

அத்துடன் அரசியல் பழிவாங்கல் அல்லது வேறு தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக ஓய்வு பெற்றவருக்கு அடுத்த மாதமே ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றால் அந்த நபர் எப்படி வாழ்வார்.

இந்நிலைமையினால் இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். நாளை ஒருவர் ஓய்வு பெற்றால், அவரது அடுத்த சம்பள தினத்தன்று ஒய்வூதியம் கிடைக்க வேண்டும்.

எவ்வித குறைபாடுகள் இருந்தாலும் பரவாயில்லை ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். பின்னர் பிழை என்றால் அதனை திருத்திக் கொள்ளலாம்” என பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post