மகனின் இழப்பை தாங்க முடியாமல் விபரீத முடிவு: கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்த தம்பதி

பல்வேறு சமூக காரியங்களில் ஈடுபட்டு வந்த தம்பதி மகனின் இழப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தில் சணப்பிரட்டி பகுதியை சேர்ந்த சேகர் (64) என்பவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நேர்மையாக பணியாற்றி மக்களிடையே நற்பெயரை சம்பாதித்திருந்த சேகர், ஓய்வுக்கு பின்னரும் கூட தனது மனைவி கிருஷ்ணவேணியுடன் சேர்ந்து அப்பகுதியில் மரங்கள் நடுதல், கோவில் நிகழ்ச்சிக்கு உதவி செய்தல் என சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.இதற்கிடையில் தம்பதியின் ஒரே மகன் பாலச்சந்திரன் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் தோல்வியால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தம்பதிக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஆறுதல் கூறி வந்துள்ளனர்.துக்கத்திலிருந்து மீள்வதற்காக தம்பதியினரும் முன்பை விட அதிகமாக சமூக பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதிக பாசம் கொண்ட மகன் இறந்த துக்கத்தால் வேதனையில் இருந்த தம்பதி, இன்று அதிகாலை ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.அப்பகுதி வழியாக சென்ற மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அபபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post