அரசாங்கத்தின் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு! நேர்முகத்தேர்வுக்கான திகதி அறிவிப்பு

அரசாங்கத்தின் ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 3100 விண்ணப்பதாரிகளுக்கே இவ்வாறு நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவள்ள நிலையில் கடிதங்கள் கிராம சேவகர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் புதன்கிழமை 26 ஆம் திகதியில் இருந்து சனிக்கிழமை 29 ஆம் திகதி வரை குறித்த நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளது.

நேர்முகத்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் கடிதங்களை அந்தந்த கிராம சேவகர்களிடம் பெற்று நற்சான்றிதழ் பத்திரத்துடன் கடித்தினையும் நேர்முகத்தேர்வுக்கு கொண்டு வருமாறு பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சேவகர் பிரிவாக நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளதால் விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் கிராம சேவகர்களை தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நேர்முகத்தேர்வுகள் இடம்பெறும் கிராமத்தை சேர்ந்த கிராம சேவகர்கள் அன்றைய தினம் பிரதேச செயலகங்களிலேயே கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post