கொழும்பில் சற்று முன்னர் நடந்த விபரீதம்

கொழும்பிலுள்ள இலங்கை மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

மேலே இருந்து விழுத்தவரின் தலை சிதறிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.கொழும்பு மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து விழுந்த 16 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியில் பணிப்புரியும் அதிகாரி ஒருவரின் மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

யாராவது தள்ளி விட்டார்களா அல்லது தற்கொலை முயற்சியா என்பது தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post