பிரதமரின் அலுவலகத்திற்கு சென்ற அவரது பேரன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பேரன் நிர்வான் ராஜபக்ச அண்மையில் தனது தாத்தாவை பார்க்க அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்ததாக பிரதமரின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ச தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரோஹித்த ராஜபக்ச இது தொடர்பான புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

தனது பேரன் நிர்வான் ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச கொஞ்சி விளையாடுவதை காட்டுவதாக அந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.

மேலும் நிர்வான் ராஜபக்சவின் பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Previous Post Next Post