கம்பெரலிய அபிவிருத்தி திட்ட வீதியில் மோசடி? ஓர் ஆண்டில் வீதி சேதம்

கிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடம் ஆகும் முன்னர் சேதமடைந்துள்ள நிலையில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் என்று மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.கிளிநொச்சி – திருவையாறு மைதான வீதியில் முன்பள்ளி, கிராம சேவையாளர் அலுவலகம் உள்ளிட்ட பல தேவைகளை மக்கள் அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீதி பாரிய நிதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும், உரிய முறையில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படவில்லை எனவும், கண்காணிப்புக்கள் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கும் மக்கள், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.இதேவேளை பாரிய நிதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளது. குற்றம் சாட்டுகின்றனர். இந்த வீதி புனரமைப்பின் போதான மோசடி தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக உண்மை வெளியாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post