14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவுள்ள தென்னாபிரிக்க வீரர்கள்..?

இந்தியாவுக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய தென்னாபிரிக்க அணியின் வீரர்கள், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

எனினும், முதலாவது போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டதுடன், ஏனைய இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில், சுற்றுப்பயணத்திற்கு சென்று 10 நாட்களின் பின்னர் நாடு திரும்பிய தென்னாபிரிக்க அணி வீரர்களை, தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post