தொடர்ச்சியாக 35 நாட்கள் கொரோனாவை எதிர்த்து போராடிய இளம் மருத்துவர்: இறுதியில் நடந்த சோகம்!

தொடர்ச்சியாக 35 நாட்கள் கொரோனாவை எதிர்த்து போராடிய இளம் மருத்துவர் பக்கவாதத்தால் உயிரிழந்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் டாங்கியாங் பகுதியை சேர்ந்த மயக்க மருந்து நிபுணரான மருத்துவர் டோங் தியான் (29) என்பவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் தொடர்ந்து 35 நாட்களாக ஈடுபட்டுள்ளார்.

அதன்பிறகு பிப்ரவரி 29 அன்று அவருக்கு மருத்துவமனை ஓய்வளித்ததோடு, தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் கூறியுள்ளது.

அதன்படி தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட தியானிற்கு, திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மார்ச் 3 ம் திகதி அன்று அவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு 15 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த தியான், தனது 30-வது பிறந்தநாள் இன்னும் ஒரு வாரத்தில் வரவிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பக்கவாதத்தால் உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post